News January 31, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 30ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்ததன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News September 1, 2025
நாமக்கல் மாவட்டம் உருவான வரலாறு..!

01-01-1997ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தின் எல்லைகள் வடக்கில் சேலம், தெற்கில் கரூர், கிழக்கில் திருச்சி மற்றும் சேலம் மற்றும் மேற்கில் ஈரோடு அமைந்துள்ளது.நாமக்கல்லில் உள்ள பாறை கோட்டை இந்த ஊரின் சிறப்பு அம்சமாகும். முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. எனவே, “முட்டை நகரம்” என்று அழைக்கப்படுகிறது. (SHAREit)
News September 1, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.9 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.98 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி விலை கடந்த 5 நாட்களில் கிலோவுக்கு ரூ.9 அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
News September 1, 2025
நாமக்கல்: முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.