News August 10, 2025
நாமக்கல்லில் இன்று முட்டை விலை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 5 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Similar News
News August 12, 2025
நாமக்கல்லில் ஆக.14-ல் வேலைவாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04286 222260 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE செய்து உதவுங்க!
News August 12, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம பஞ்சாயத்துக்களிலும், வருகிற ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்சாயத்து அறிக்கை வாசித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை(ஆக.13) புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரை இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்லும் என்பதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.