News August 25, 2025

நாமக்கல்லில் இன்று மின் ரத்து!

image

நாமக்கல்: திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட இளநகர் துணை மின் நிலையத்துல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஆக.25) வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்படிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரிய மணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம்பாளையம் பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

Similar News

News August 25, 2025

நாமக்கல்லில் முட்டை பிஸ்னஸ் செய்ய மானியம்!

image

நாமக்கல் மக்களே.., ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நாமக்கல்லில் முட்டை வியாபாரம், தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>>(SHARE)

News August 25, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தாலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் விலை ரூ.5 ஆகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.24) நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!