News April 6, 2025
நாமக்கல்லில் இன்று மழை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க!
Similar News
News April 7, 2025
நாமக்கல் அங்கன்வாடியில் 127 காலிப்பணியிடம்

நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <
News April 7, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலையை 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை தொடர முடிவு செய்யப்பட்டது .
News April 6, 2025
நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.