News January 29, 2026
நாமக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற உள்ள இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சேர்ந்த வல்லுநர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
Similar News
News February 3, 2026
நாமக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News February 3, 2026
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
ப.வேலூர் அருகே சோகம்: வாலிபர் பலி!

கபிலர்மலை கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் (21). நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், மாணிக்கராஜ் மட்டும் வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர் ஒரு மணி நேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


