News January 18, 2026
நாமக்கல்லில் அதிரடி: 12 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பெட்டிக்கடைகள் மற்றும் சந்து பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 594 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News January 21, 2026
நாமக்கல்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <
News January 21, 2026
கந்தம்பாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி காலனியைச் சேர்ந்த லட்சுமணன் (65) என்பவர், பெருங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் இரவு காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் மொபட்டில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


