News September 18, 2025

நாமக்கல்:ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

நாமக்கல் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

Similar News

News March 3, 2026

கறிக்கோழி கிலோ ரூ.126 ஆக உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.126 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 4.60- ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.62 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News March 2, 2026

நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 2, 2026

நாமக்கல்: முட்டை விலை ரூ. 4.60-ஆக நீடிப்பு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!