News January 29, 2026
நாமக்கலில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை படிப்படியாக உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
நாமக்கல்லில் குறைந்த விலையில் வாகனம் வாங்கனுமா?

நாமக்கல் மாவட்ட காவல்துறையால் பயன் படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 9:45 மணிக்குள் ரூ.5,000 முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். SHARE IT
News January 30, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் முன்மாதிரி திருநங்கையர் விருது பெற, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விருது பெற தகுதியான திருநங்கைகள், அரசின் இணையதளத்தில் மட்டும் வரும் பிப். 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
இரவு நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


