News July 26, 2024
நாமக்கலில் பருத்தி 25 லட்சத்திற்கு வர்த்தகம்

நாமக்கல் அடுத்த மல்லசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தொடக்க சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி. ரகம் 1குவிண்டால் ரூ.6,699 முதல் ரூ.7,479 வரையிலும், சுரபி ரகம் 1குவிண்டால் ரூ.8,690 முதல் ரூ.8,900 வரையிலும், கொட்டு ரகம் 1குவிண்டால் ரூ.3,899 முதல் ரூ.4,909 வரையிலும் மொத்தம் 25லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.இதன் விலை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (செப். 9) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டையின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப். 9) இரவு ரோந்துப் பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <