News April 25, 2024

நாமக்கலின் தனித்துவமான வளைவுகள்!!

image

1300 மீ உயரமும், 300 கிமீ நீளமும் கொண்ட கொல்லிமலை, 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான இந்த வளைவுகள் 46.7 கிமீ நீளம் கொண்டவை. இந்தியாவின் நீண்ட கொண்டைஊசி வளைவு சாலை இதுவே. மலையின் உச்சியில் ஆகாய கங்கை அருவியும், சிவன் கோவிலும் உள்ளது. இந்த வளைவினாலேயே இம்மலை, ‘மரணத்தின் மலை’ என்றொரு பெயரும் பெற்றுள்ளது. வாகனம் ஓட்டுவதை நேசிப்பவர்களுக்கு ஏற்ற சாலையாகவும் உள்ளது.

Similar News

News November 20, 2024

குமாரபாளையத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News November 20, 2024

காளான் வளர்க்க இலவச பயிற்சி

image

ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 25, 26-ல் நடக்கவுள்ளது. இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 98946-89809 என்ற எண்ணை அழைக்கலாம்.

News November 20, 2024

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.