News January 17, 2026
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.
Similar News
News January 27, 2026
வங்கதேசத்திற்கு மீண்டும் ஷாக் கொடுத்த ICC

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசத்தை <<18952171>>ICC நீக்கியது<<>>. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு ஊடக அங்கீகாரத்தை (T20WC) வழங்கவும் ICC மறுத்துள்ளது. இந்தியாவுக்கு செல்ல விசாவுக்காக 150 பத்திரிகையாளர்கள் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ICC முற்றிலுமாக வங்கதேசத்தை புறக்கணித்ததாக பார்க்கப்படுகிறது.
News January 27, 2026
நகைக்கடன்.. பிப்.1-ல் முக்கிய முடிவு

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகைக்கடன் வழங்குவதில் சில கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இன்னும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.
News January 27, 2026
தவெக தேர்தல் அறிக்கை.. விஜய்யின் திட்டம்

தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் அருண்ராஜ் தலைமையிலான குழுவுக்கு முக்கிய அறிவுறுத்தலை விஜய் வழங்கியுள்ளார். அக்குழுவானது தமிழகத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்பணியை அக்குழுவினர் விரைவில் தொடங்க வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


