News February 10, 2025
நான் வாங்கிய வாக்குகள் எல்லாம் மக்கள் அளித்த வாக்குகள்

திருச்சி விமான நிலையத்தில் இன்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வாங்கிய அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்காக மக்கள் அளித்த வாக்குகள்.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளுமே தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளார்கள் என்றார்.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


