News August 23, 2025

நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

image

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.

News August 22, 2025

ராம்நாடு : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

இராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!