News December 29, 2025
நான் சாதிக்கு எதிரானவன்: மாரி செல்வராஜ்

சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசி கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் விசிலடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். அப்போது, இந்த கொண்டாட்டங்கள் அனைத்துமே சாதிக்கு எதிரானதாக இருந்தால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று மாரி கூறினார். எதிர்காலத்தில், ஒருவேளை அரசியல் கட்சி (அ) அமைப்பை தொடங்கினாலும் தான் என்றைக்கும் சாதிக்கு எதிராகவே செயல்படுவேன் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 3, மார்கழி 19 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11.30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News January 3, 2026
Water Purifier விலை குறைகிறதா?

GST கவுன்சில் கூட்டம் அடுத்த 15 நாள்களில் கூட உள்ளது. அதில், காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பான்கள் மீதான GST-ஐ 18% to 5% ஆக குறைக்கவும், அதை அத்தியாவசிய பொருள்களாக வகைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவது மத்திய அரசின் கடமை என அம்மாநில ஐகோர்ட் கூறியிருந்தது.
News January 3, 2026
அதிகரிக்கும் ஒயிட் காலர் பயங்கரவாதம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, நன்கு படித்தவர்கள் கூட தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கல்வி கற்பதன் நோக்கம் என்பது தொழில்முறை வெற்றியை பெறுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பண்புகளை வளர்த்துக்கொள்வதை சேர்த்துதான் என்று அவர் குறிப்பிட்டார்.


