News March 28, 2026

நான் ஒரு அமைதித் தூதுவன்: டிரம்ப்

image

தன்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராக உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என டிரம்ப் கூறியுள்ளார். தான் ஒரு உண்மையான அமைதி விரும்பி என்ற அவர், இதுவரை 8 போர்களை நிறுத்தி பல லட்சம் உயிர்களை காத்துள்ளதாகவும் பெருமையாக பேசியுள்ளார். மேலும், இதுவே தனது வாழ்நாள் அடையாளம் என்றும், இதையே தான் மனப்பூர்வமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?

Similar News

News April 11, 2026

குமரி : ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News April 11, 2026

மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. அதிரடி தீர்ப்பு

image

பெண் குழந்தைகளுக்கு தந்தை தான் முதல் ஹீரோ. ஆனால், பட்டாபிராமை சேர்ந்த 2 சிறுமிகளுக்கோ தந்தையே வில்லனாகியுள்ளார். மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த அந்த கொடூர தந்தைக்கு திருவள்ளூர் போக்சோ கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. முரளி என்பவர் 2020-ல் தனது முதல் மனைவியின் 13 வயது மகள், 2-வது மனைவியின் 12 வயது மகள் என இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News April 11, 2026

காமராஜருக்கும் எனக்கும் தான் போட்டியே: சீமான்

image

தமிழகத்தில் யார் நல்லாட்சி கொடுத்தது, இனி யார் கொடுக்கப் போவது என்பதே போட்டி என்று சீமான் கூறியுள்ளார். ஆலங்குளம் பரப்புரையில் பேசிய அவர், 9 ஆண்டுகள் தாத்தன் காமராஜர் நல்லாட்சி கொடுத்தார் என்பது வரலாறு; அந்த தாத்தனையும் தாண்டி நல்லாட்சி கொடுப்பான் இந்த பேரன் சீமான் என்பதே இனிவரும் வரலாறு என்றார். எனவே, நடிகருக்கும், ரோடு ஷோ செய்பவருக்கும் வாக்களிக்காதே என விஜய்யையும் தாக்கிப் பேசினார்.

error: Content is protected !!