News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

Similar News

News April 7, 2026

3 மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்வு!

image

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை மறுநாள் ஏப்.9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் 3 மாநிலங்களிலும் அரசியல் தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2026

FLASH: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.. தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் ஏப்.12 வரை மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது. உங்கள் ஊரில் மழையா?

News April 7, 2026

திமுகவுக்கு கடும் போட்டியாகும் சென்னை.. களத்தில் ஸ்டாலின்

image

ஸ்டாலினும், சபரீசனும் சென்னையிலுள்ள திமுக தொகுதிகளின் பொறுப்பாளர்களையும் 2-ம் கட்ட தலைவர்களையும், போனில் அழைத்து 10 நிமிடங்கள் வரை பேசியதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம், பெரம்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகள் திமுகவுக்கு கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதனால், இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்களாம்.

error: Content is protected !!