News June 8, 2024

நாட்றம்பள்ளி: பராமரிப்பு பணி தீவிரம்

image

நாட்றம்பள்ளி அடுத்த நாயனதெரு அரசு பள்ளியில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நாகராஜ் தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தேர்வு அறைகள் மற்றும் பள்ளி கழிவறைகள் சுகாதாரமாக வைத்தல் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர்.

Similar News

News January 25, 2026

திருப்பத்தூர்: பெண் மீது சரமாரி தாக்குதல்!

image

சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த தமபதி அருண் (26), தமிழரசி (23). இவர்கள் அப்பகுதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் பொங்கல் வைத்தனர். அப்போது ஊர் நிர்வாகி செல்வராஜை அருண் அழைக்காததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வராஜ், மற்றும் அவருடைய உறவினர்கள் அருண், தமிழரசியை தாக்கி உள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

News January 25, 2026

திருப்பத்தூர் மக்களே OTP வருதா? ALERT!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

திருப்பத்தூரில் கொலை வெறி தாக்குதல்!

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரை முன்விரோதம் காரணமாக நேற்று (ஜன.24) இரவு மூன்று இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதில் காயமடைந்த ஏழுமலை, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!