News July 26, 2024
நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது: ஆளுநர்

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழத்தில் கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாதுகாப்பில் தன்னிறைவு அதிகரிப்பதாலும் , தனியார் துறையின் சக்தியைப் பயன்படுத்துவதாலும் நமது நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது என்று பேசினார்.
Similar News
News March 3, 2026
JUST IN: சென்னையில் கோர விபத்து!

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.
News March 3, 2026
சென்னை: ஏடிஎம் வாசலில் நூதன மோசடி

எம்.கே.பி.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பிஷு சர்தா (31). கேட்டரிங் ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஏ.டி.எம்-ல் பணம் செலுத்த சென்றார். அங்கிருந்த நபர், பணத்தை வாங்கி கொண்டு ஆன்லைன் வாயிலாக, வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எம்.கே.பி.நகர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


