News October 31, 2025
நாடு முழுவதும் விலை குறைந்தது.. அதிரடி ஆஃபர்

நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹485 திட்டம் இனி ₹460-க்கு கிடைக்கும். இதில், 72 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல், ₹1,999 ரிசார்ஜ் பிளானிலும் ₹100 தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News November 1, 2025
தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News November 1, 2025
Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News November 1, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*உங்கள் ஆழ்மனதுக்கு ஒரு கோரிக்கை விடுக்காமல், ஒருபோதும் தூங்கச் செல்லாதீர்கள்.
*தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
*இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது, அதை கண்டுபிடியுங்கள்.
*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும்.
*ஒரு ஆணின் சிறந்த நண்பர், ஒரு நல்ல மனைவி. 


