News March 22, 2026
நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிப்பு.. REWIND

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற்கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?
Similar News
News April 8, 2026
தூத்துக்குடி: வேன் மோதி பெண் பக்தர் பலி.!

கயத்தாறில் நான்கு வழிச்சாலையில் நடந்து சென்ற பாத யாத்திரை பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மகாவீரர் என்பவரின் மகள் சஞ்சு (27) என்பவரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் செளமியா (62), மஞ்சு (27), தீப்சி (52) ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர்.
News April 8, 2026
இராம்நாடு: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணைமின் நிலையத்தில் அவசரப் பணி காரணமாக இன்று (ஏப்.8) காலை 11 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். குறிப்பாக மின்னோட்ட பகுதிகளான சிட்கோ, எமனேஸ்வரம், மஞசள்பட்டினம், வலையனேந்தல், வைகை நகர், புதுநகர், காந்தி நகர், பெரும்பச்சேரி, மணிநகர், சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News April 8, 2026
BIG NEWS: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $160(3.44%) உயர்ந்து $4,817-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $4(5%) உயர்ந்து $77-க்கு விற்பனையாகிறது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை 2 வாரங்களுக்கு நிறுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.


