News November 1, 2025
நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது. *பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும் (முன்பு ₹50) *கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம் (முன்பு ₹100), *வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளை பெற, முதல் நபருக்கு ₹700 & அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350 கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News November 1, 2025
தென்மாவட்டங்களுக்கு சிறப்பு தேர்தல் குழு அமைக்கும் NDA

தென்மாவட்டங்களுக்கு என தனியாக சிறப்பு தேர்தல் குழுவை அமைக்க அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. பசும்பொன்னில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து, நேற்று நயினார் வீட்டில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தென்மாவட்டத்தில் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கவும், அதிக இடங்களை கைப்பற்றும் வகையிலும் NDA, சிறப்பு தேர்தல் குழுவை அமைக்கிறது.
News November 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. புதிய அறிவிப்பு வந்தது

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வழங்கப்படவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. SHARE IT.
News November 1, 2025
முட்டை போடும் அதிசய மலை!

சீனாவில் உள்ள ஒரு மலை, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடுகிறது தெரியுமா? குயிஷோ என்ற பகுதியில் அமைந்துள்ள Chan Da Ya என்ற மலை, Limestone, சிலிகா & சாண்ட் ஸ்டோன் போன்ற அடுக்குகளால் ஆனது. இவை காலநிலை மாற்றத்தால், இப்படி முட்டையாக விழுவதாக விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், இந்த 20–60 செமீ அளவிலான முட்டை பாறைகளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி, உள்ளூர் மக்கள் வீட்டில் வைத்து பூஜிக்கின்றனர்.


