News December 20, 2024

நாடாளுமன்ற வளாகத்தில் தென்காசி எம்.பி போராட்டம்

image

தென்காசி எம்.பி டாக்டர்.ராணி ஶ்ரீ குமார் நேற்று, அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியினரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸ் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Similar News

News March 3, 2026

தென்காசியில் போட்டியிட நகரமன்ற தலைவர் விருப்ப மனு

image

திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு வரும் மார்ச் 6 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.

News March 3, 2026

தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2026

தென்காசி: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.!

image

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் சாலை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த மூதாட்டியின் உடலுடன் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!