News March 25, 2024
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் பழங்குடிகள்

தமிழ்நாட்டில் வாழும் கொண்டா ரெட்டி இன மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டி மலை ஜாதி முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. எஸ் டி பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 11, 2026
திருத்தணி: ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் நேற்று(பிப்.10) திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு, ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா். அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்தி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.
News February 11, 2026
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெருமத்தூர் பகுதியில் திருப்பதி நெடுஞ்சாலை சுங்கச்சவாடி செயல்பட்டு வருகிறது. அதில், பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கண்டெய்னர் அறையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீப் பிடித்தது. பணியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அறையில், சாமிப் படத்திற்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து தீப் பிடித்தது தெரிய வந்தது.


