News March 23, 2026

நாங்கள் தாக்கவில்லை: ஈரான்

image

டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் ராணுவத் தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியதை அடுத்து, இந்த மறுப்பு வந்துள்ளது. டியாகோ கார்சியா ஈரானிலிருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னதாக தங்களிடம் 2,000 கி.மீ செல்லும் ஏவுகணை மட்டுமே உள்ளதாக ஈரான் கூறியிருந்தது.

Similar News

News April 7, 2026

அரசியல் கட்சியினரை எச்சரிக்கும் கோடை வெயில்

image

தேர்தல் காலத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கியதால், மக்கள் மட்டுமல்ல அரசியல் கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 15 நாள்களுக்கு வெப்ப அலை நிலவும் என IMD எச்சரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளைவிட 2 மடங்கு அதிகம். அதேபோல், இரவிலும் வெப்பம் நிலவுகிறது. 80 ஊராட்சி ஒன்றியங்களில் இரவு வெப்பம் 26-27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிறதாம். எனவே, தேர்தல் பரப்புரைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்கவும்.

News April 7, 2026

பெயர் குழப்ப அரசியலில் விஜயகாந்த், கருணாநிதி

image

விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய், ஜோசப் ஆகிய பெயர்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது பேசுபொருளாகியுள்ளது. இதற்கு முன்பாக, விஜயகாந்துக்கு (விருத்தாசலம்) 2006-ல் 3 சுயேச்சைகள் அவரது பெயரிலேயே போட்டியிட்டனர். 2011-ல் 1, 2016-ல் 2 பேர் விஜயகாந்த் பெயரில் களமிறங்கினர். 2006-ல் கருணாநிதி பெயரிலும் ஒருவர் சேப்பாக்கத்தில் போட்டியிட்டார்.

News April 7, 2026

காங்., வேட்பாளருக்கு எதிராக காங்., நிர்வாகி போட்டி

image

ஒவ்வொரு கட்சியும் வெயில், மழை என்று பாராமல் தேர்தல் பணி செய்து வரும் நிலையில், காங்கிரஸில் உள்கட்சி பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை என கூறப்படுகிறது. நாங்குநேரி காங்., வேட்பாளரான ரூபி மனோகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான தனிதங்கம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

error: Content is protected !!