News December 23, 2025
நாகை: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 2, 2026
வேலைவாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்ட குழந்தைகள் நலன் துறையில் காலியாக உள்ள உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஜன.8-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
News January 2, 2026
நாகை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை; புதிய உச்சம்!

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


