News January 1, 2026
நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
நாகை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

நாகை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 2, 2026
நாகை: சாலை விபத்தில் போலீஸ் பலி

பஞ்சநதிகுளத்தை சேர்ந்தவர் தமிழ் குடிமகன் (31). திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் இவர், கடந்த 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து பஞ்சநதிகுளம் நோக்கி சென்றுள்ளார். அப்போது தேத்தாக்குடியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 2, 2026
நாகை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


