News May 6, 2024
நாகை: 478 மதிப்பெண்கள் பெற்று அசத்திய இரட்டையர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் நிகில், நிர்மல் இரட்டையர்களான இருவரும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News January 1, 2026
நாகை: ரயில் நேரம் மாற்றம்

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடியில் மின்சார எஞ்சின், டீசல் எஞ்சின் ஆக மாற்றம் செய்யப்படுவதால், இரவு 11:05க்கு புறப்பட்ட ரயிலானது இனி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையானது மின் மயமாக்கப்பட்டதும் ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
நாகை: 46 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது

நாகை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் கொலை மற்றும் இதர வழக்குகளில் 34 பேரும், தொடர் மது கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் என நாகை மாவட்டத்தில் மொத்தம் 46 பேர் ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


