News November 7, 2025

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் வராது!

image

மயிலாடுதுறை – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான நீருந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நவம்பர் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று தேதிகளில் நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

நாகை: போலீஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

வாய்மேடு ஊராட்சியில் பட்டியலினத்தைச் சோ்ந்த காசிநாதன் என்பவா் மீது காவல் நிலையம் அருகிலேயே தாக்குதல் நடத்தியவா் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சாா்பில் வாய்மேடு காவல்நிலையம் முன்பு வரும் நவ. 11 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

நாகை: ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த பரிசு தொகை பெற தகுதியுடையோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள அறை எண் 9-ல் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!

error: Content is protected !!