News April 18, 2024
நாகை: 1551 வாக்கு சாவடி மையங்கள் தயார்

நாகை மக்களவைத் தொகுதியில் 7,92,848 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 1551 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டதில் வாக்குச்சாவடி மையங்களில் 3190 அலுவலர்கள், 59 நுண் பார்வையாளர்கள், 336 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 7500 அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
Similar News
News September 26, 2025
நாகையில் சைக்கிள் போட்டி: கலெக்டர் அறிவிப்பு

நாகையில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நாளை நடத்தப்பட உள்ளது. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28ம் தேதி காலை நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் கங்களாஞ்சேரி வரை நடைபெற உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகையில் 1225 விவசாயிகள் பயன்

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 8678 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1225 விவசாயிகள் பயன் அடைந்து அதற்கான தொகை ரூபாய் 18 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.