News December 18, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
Similar News
News December 21, 2025
நாகை: கிரைண்டர் வாங்க ரூ.5,000 !

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
News December 21, 2025
நாகை: சிறப்பு ரயில் அறிவிப்பு

வேளாங்கண்ணியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, குஜராத் மாநிலம் வல்சாத் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (09047) சனிக்கிழமை (டிச.20) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு டிச.22-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வந்தடைகிறது. மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் (09048) வேளாங்கண்ணியில் இருந்து டிச.22-ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, டிச.24-ஆம் தேதி வல்சாத்தை சென்றடையும்.
News December 21, 2025
நாகை துறைமுகத்தில் தீ விபத்து!

நாகை அருகே கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் தனக்குச் சொந்தமான ஃபைபா் படகை, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தாா். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது அவரது படகு முழுவதுமாக தீயில் கருகி கிடந்துள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் நாகை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனா். எரிந்த படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.


