News January 19, 2026
நாகை: வேலை வேண்டுமா? இங்கு போங்க!

நாகை மாவட்டத்திற்கு அருகே திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும் என்கின்றனர். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News February 15, 2026
நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
News February 15, 2026
நாகை: குளத்திற்கு குளிக்கச் சென்ற பூசாரி உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன். பிச்சக்கொடை அய்யனார் கோவில் பூசாரியான இவர், நேற்று (பிப்.14) காலையில் குளத்தில் குளிக்க சென்ற போது படிக்கட்டில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த தீயணைப்புத்துறைடினர் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து, வேதாரண்யம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


