News January 27, 2026
நாகை: வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

நாகை மகாலட்சுமி நகரை சேர்ந்த மாதரிசி, கடந்த 22ம் தேதி குடும்பத்துடன் விருதாச்சலம் அருகே உள்ள கோனார் குப்பம் மாதா கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை, 85 கிராம் வெள்ளி, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 21, 2026
நாகை: இன்று மின்தடை அறிவிப்பு

நாகை மாவட்டம், திட்டச்சேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.21) மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, திருமருகல், மருங்கூர், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், பொறக்குடி, இடையாத்தாங்குடி, பனங்குடி, வாழ்மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 21, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் RRB குரூப் -D தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு (பிப்.26) வியாழன் முதல் தினசரி 2 மணி முதல் -5 மணி வரையிலும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.