News September 9, 2025

நாகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாகப்பட்டினம், 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (செப்.10) புதன் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து, பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

நாகை: ஆசிரியர் தேர்வுக்கு நாளை கடைசி நாள்!

image

நாகை மக்களே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே<> https://trb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 9, 2025

நாகை: ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

நாகை செம்மட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதன் (18). டீ கடை தொழிலாளியான இவர் சம்பவதன்று கீழ்வேளுர் அருகே மேல ஒதியத்தூர் பகுதியில் உள்ள ஒடம்போக்கி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் ஏற்பட்ட சுழற்சியில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2025

நாகை: கல்விக் கடன் வழங்கும் முகாம்

image

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவற்றின் சார்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகின்ற 11-ம் தேதி காலை 10:30 நடக்கிறது. இதில் கல்விச் சான்று, சேர்க்கை சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பெற்றோரையும் அழைத்து வந்து பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!