News May 7, 2025
நாகை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
நாகை: நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் இம்முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!
News January 6, 2026
நாகை: கடலில் தவறி விழுந்தவர் மாயம்

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த அறிவு (36) உள்பட 13 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த அறிவு கடலில் தவறி விழுந்து மாயமானார். தகவலறிந்த இந்திய கடற்படையினர் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
News January 6, 2026
நாகை அருகே முதியவர் அடித்துக் கொலை

கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ரவி (60). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும் கீரங்குடியை சேர்ந்த சிவபாலன் (29), பிரகாஷ் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் நிலவியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முதியவருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரை தலையில் பலமாக தாக்கியதில், ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வலிவலம் போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.


