News September 13, 2025
நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த வாடகையில், 4456 தனியார் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் உழவர் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News September 13, 2025
நாகை: 50% மானியத்தில் கிரைண்டர்

நாகை மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால், நாகை மாவட்ட சமூக நல அலுவரிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News September 13, 2025
நாகூர் விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாகூர் பெருமாள் குளம் மேல்கரை புளியந்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை (செப்.14) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாளை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
News September 13, 2025
நாகை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <