News December 4, 2024
நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
நாகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<
News January 8, 2026
நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

நாகூர் – கங்களாஞ்சேரி சாலையில், நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது சின்ன கண்ணமங்களத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கொட்டாரக்குடியை சேர்ந்த சாய்குமார் (25) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக சாராய பாக்கெட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
News January 8, 2026
முன்மாதிரி விருது: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <


