News November 8, 2025

நாகை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

நாகை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan<<>>.gov.in என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News November 8, 2025

நாகையில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

image

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(நவ.10) வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கைமுகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், புகைப்படம், அனைத்து அசல் சான்றிதழுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் அறிய 04365-250126 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்தார்.

News November 8, 2025

நாகை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்ல் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், நாகை டாஸ்மாக் அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு வார காலத்தில் கடையை காலி செய்வதாகவும், அது வரை கடை மூடப்பட்டிரும் என உறுதி அளித்ததையெடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News November 8, 2025

நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233176>>பாகம்<<>>-2)

error: Content is protected !!