News April 23, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
Similar News
News August 11, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
நாகை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

நாகை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 18 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <
News August 11, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,901 பேர் கைது!

நாகை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சட்டவிரோத மதுக்கடத்தல், கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 23,769 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 7,123 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.