News April 30, 2025

நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

image

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

நாகை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

image

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்

News October 18, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் இன்று!

image

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடந்த 1991-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் தேதி நாகை பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட கடற்கரைகள், எழில்மிகு வயல்வெளிகள், பழமை வாய்ந்த கோவில்கள், வேற்றுமை காணாத மக்கள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயம் எதுவென்று கமெண்டில் தெரிவிக்கவும்!

error: Content is protected !!