News January 2, 2026

நாகை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை; புதிய உச்சம்!

image

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 2, 2026

நாகை: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

நாகை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

நாகை: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) சார்பில் மஞ்சப்பை விருது பெற ஜன.15-க்குள், பிளாஸ்டிக் இல்லா நடைமுறைகளை பின்பற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3-ஆம் பரிசு 3 லட்சம் வழங்கப்படும் என மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 2, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான TANFINET இணையதள வசதி வழங்க தொழில் பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இதற்கான விண்ணப்ப பதிவு TANFINET என்ற இணையதள போர்டல் https://tanfinet.tn.gov.in மூலம் நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 14-க்குள் விருப்பமுள்ள பங்கீட்டாளர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர்அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!