News March 4, 2026

நாகை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 8, 2026

நாகை: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

image

நாகை மாவட்டம் வெள்ளைக்கோன்காடு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்துள்ளனர். இதில், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து செண்பகநல்லூர் வரை உள்ள இணைப்பு சாலை பல வருடங்களாக சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் சாலையை சீரமைக்காததால், கடந்த நாடாளுமன்ற தேர்தலை கிராமத்தினர் புறக்கணித்தனர். அவ்வலையில் இந்த சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

News April 8, 2026

நாகை: பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர்

image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜெயகதீசன்(67). இவருக்கும் இவரது மகன் பிரபாகரனுக்கும்(40) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால், ஜெயகதீசன் மன உனைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்துவிட்டு, நெய்விளக்கு பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின் அங்கிருந்த மக்கள் அளித்த தகவகலின்பேரில் வந்த வேதாரண்யம் போலீசார், உடலை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

News April 8, 2026

நாகை: கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

image

நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் வெளிப்பாளையம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே நடந்து வந்த 2 பெண்களை நிறுத்தி விசாரணை செய்தில், இருவரும் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனால் போலீசார் அவர்களது பையில் சோதனையில் செய்ததில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து வெளிப்பாளையத்தை சேர்ந்த அகிலா(29), பசும்பொன்(53) அகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!