News October 15, 2025
நாகை: ரூ.12 லட்சம் மதிப்பில் சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

நாகை மாவட்டம் திருக்குவளையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ரூ.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சரக ஆய்வாளர் அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற விழாவில் உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி, செயல் அலுவலர் சீனிவாசன் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மலர்வண்ணன், மு.ஒ.கவுன்சிலர் செல்வம் ஆய்வாளர் ச.சிவகணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Similar News
News October 15, 2025
நாகை: மத்திய அரசு வேலை.. ரூ.35,400 சம்பளம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 15, 2025
நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
நாகை பற்றிய அறிய தகவல்!

நாகை ஒரு கடற்கரை நகரம் ஆகும். இது சோழ குல வள்ளிபட்டினம் என்றும் அறியப்பட்டது. கிமு 3 வது நூற்றாண்டில் பர்மிய வரலாற்று உரையில் இது ஒரு பாரம்பரிய நகரமாக தெளிவு படுத்தப்படுகிறது. அறிஞர்களின் கூற்றுப்படி பண்டைய புத்த இலக்கியத்தில் ”படரிதித்த” இல் இருந்து மருவி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். பண்டைய காலங்களில், நாகநாடு , நாகப்பட்டினம் என்பது மட்டுமே ஸ்ரீ லங்கா வால் குறிப்பிடப்படுகிறது. SHARE IT.