News April 4, 2025
நாகை: ராஜராஜ சோழனின் புத்த மடாலயம்

நாகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பழங்கால கட்டடம் ஒன்று இடித்து, மரத்தை வெட்டியதன் விளைவாக, 1930ல் சுமார் 50க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டன. அதில், கல்வெட்டொன்றில் கி.பி. 1006ல் ராஜராஜ சோழனால் சூடாமனி விஹாரமென்ற இப்புத்த மடாலயம் கட்டப்பட்டது என்பது தெரியவந்தது. பின் இச்சிலைகள் சென்னை மும்பை உட்பட உலகெங்கும் 14 அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
Similar News
News April 4, 2025
நாகை: ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!
News April 4, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!
News April 3, 2025
குழந்தை பேறு வேண்டுதலை நிறைவேற்றும் சட்டைநாதர்

நாகப்பட்டினம் அருகே சீர்காழி எனும் ஊரில் சட்டைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சட்டைநாதர் மூலவராக உள்ளார். மேலும் சிறப்பாக சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு நீண்ட நாள் குழந்தை வேண்டுவோர் சென்று வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்குமென நம்பப்படுகிறது. மேலும் வழக்கு பிரச்சனைகளில் நல்தீர்வு கிடைக்குமாம். உடனே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.