News October 1, 2025
நாகை: மைல் கல்களுக்கு சிறப்பு பூஜை

ஆயுதப் பூஜையை முன்னிட்டு நாகை-விழுப்புரம் சாலையில் உள்ள எல்லை கல்களுக்கு (மைல் கல்) தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாகை-விழுப்புரம் சாலையில் உள்ள மைல்கல்களை சுத்தம் செய்து அதற்கு மாலை அணிவித்து பூஜை செய்து பணியாளர்கள் கொண்டாடினா்.
Similar News
News October 1, 2025
நாகை: புதுமைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம் ஆயிரம் கனவுகளுக்காய், மாதம் ஆயிரம்!திட்டத்தில், நாகை மாவட்டத்தில் மட்டும் 13,792 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுபட்ட மாணவர்கள் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவர்கள் கட்டாயம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
News October 1, 2025
நாகை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்!

1. வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
2. சிங்காரவேலர் கோயில், சிக்கல்
3. எட்டுக்குடி முருகன் கோயில்
4. நாகநாதசுவாமி கோயில், நாகை
5. சட்டைநாதசுவாமி கோயில், நாகை
6. சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகை
7. சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம். இந்த கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா ? கமெண்டில் தெரிவிக்கவும். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 1, 2025
நாகை: கடன் தொல்லை நீங்க இங்கே போங்க!

நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!