News April 7, 2025
நாகை: மீனவர்களின் நெகிழ்ச்சிகர செயல்

நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
Similar News
News April 9, 2025
நாகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு எண்கள்

நாகை மாவட்ட மக்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். ஆட்சியர் அலுவலகம் – 04365 – 253000, மகளிர் காவல்துறை – 04365-1091, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பேரிடர் கால உதவிக்கு – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்
News April 9, 2025
வரலாற்று சிறப்புமிக்க பகுதி

நாகையில் பல இடங்கள் சிறப்பு என்றாலும் பூம்புகார் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாக உள்ளது. இந்த கடற்கரையானது இயற்கையான மற்றும் பழமையான கடற்கரையாகும். சோழர்களின் துறைமுக நகரமாக விளங்கிய இக்கடற்கரை காவேரிப்பட்டினம்,புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நம்ம ஊர் பெருமைகளை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
அட்சயலிங்க சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழாவை நடைபெற்று வருகிறது. இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அஞ்சு வட்டத்தம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளநிலையில், அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.