News November 6, 2025

நாகை: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(26). இவர் இன்று காலை புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பிடிப்பதற்கு மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அருண்குமாரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News November 6, 2025

நாகை மாவட்டத்தில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

நாகை மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 91,218 மெட்ரிக் டன் நெல் கிடங்குகள் அனுப்பப்பட்டுள்ளது.

News November 6, 2025

நாகை: மது போதையில் லாரியை திருடி நபர்

image

நாகை அடுத்த அகர கொந்தகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது லாரியை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார்(38), என்பவர் மது போதையில் திருடி சென்ற போது, ஜிபிஎஸ் கொண்டு சக்திவேல் லாரியை டிராக் செய்து சிக்கல் பனைமேடு பகுதியில் லாரியை பிடித்தார். அதனைத் தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் தினேஷ்குமாரை ஒப்படைத்தார். பின்னர் சக்திவேல் அளித்த புகாரி பேரில் கைது தினேஷ்குமார் செய்யப்பட்டார்.

News November 6, 2025

நாகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!