News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

நாகை: மானியத்துடன் கூடிய கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகள் வழங்கப்படும். வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருட்கள், விவசாய கழிவுப் பொருட்கள், அணிகலன்கள், மெஹந்தி தயாரிப்பு போன்ற மேலும் பல தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாகை: மரம் விழுந்து வீடு சேதம்

image

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பெருநாட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் விவசாயி. இவரது கூரை வீட்டின் மேல் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் அருகே இருந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் குடிசை வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. என சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென அக்குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!