News November 26, 2025

நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்தி வயல் வரப்பு ஒரங்களில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உளுந்து விதைகள் மற்றும் விதைநேர்த்திக்கு தேவையான மருந்து வகைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று!

image

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. கடந்த நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து இன்று கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நாகை மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2025

நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் தற்போது சென்னைக்கு அருகே வலுவிழந்து மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.1) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 1, 2025

நாகப்பட்டினம்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (நவ.30) இரவு பத்து மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!