News September 13, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி கந்தகுமார் தலைமையில் இன்று (செப்.13) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நாகை மாவட்ட கோர்ட்டு, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை மற்றும் சீர்காழி தாலுகா கோர்ட்டுகளில் நடைபெறும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படும். இதன்மூலம் கால விரயம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும்.

Similar News

News September 13, 2025

நாகை: 50% மானியத்தில் கிரைண்டர்

image

நாகை மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால், நாகை மாவட்ட சமூக நல அலுவரிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News September 13, 2025

நாகூர் விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

image

நாகூர் பெருமாள் குளம் மேல்கரை புளியந்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை (செப்.14) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாளை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

News September 13, 2025

நாகை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

image

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பிறகு மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

error: Content is protected !!