News January 13, 2026
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நாகை: வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

நாகை மகாலட்சுமி நகரை சேர்ந்த மாதரிசி, கடந்த 22ம் தேதி குடும்பத்துடன் விருதாச்சலம் அருகே உள்ள கோனார் குப்பம் மாதா கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை, 85 கிராம் வெள்ளி, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
நாகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை நகர்புறம், கிடாரங்கொண்டான், வேட்டைக்காரன் இருப்பு, பொறையார், வேளாங்கண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 31ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அக்கரைப்பேட்டை, வாழமங்கலம், நாகூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


